சவுதியில் ஓட்டுநர் உரிமம் பெற்ற கேரளாவை சேர்ந்த முதல் இந்திய பெண்

ரியாத்:

வுதி அரேபியாவில் ஆண்டாண்டு காலமாக பெண்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் அந்நாட்டு அரசு பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து சவுதியில் வசித்துவரும்  கேரளாவை சேர்ந்த  பெண் ஒருவர் கார் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ளார். இதன் காரணமாக சவுதியில் கார் ஓட்ட உரிமம் பெற்றுள்ள முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

(மாதிரி படம்)

வளைகுடா நாடுகளில் பொதுவாக பெண்கள் கார் ஓட்டுவது, வாகனங்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. சவுதியிலும் பல ஆண்டுகளாக பெண்கள் வாகனங்களை இயக்க தடை நீடித்து வந்தது.

தங்களை கார் போன்ற வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்நாட்டு பெண்கள் 199ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆட்சி அதிகாரம் மாற்றம் காரணமாக தற்போதைய மன்னர் சல்மான் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி,  சவுதியில் பெண்களும் ஆண்களும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்றும், பெண்களும் கார் ஓட்டலாம் என்று ஆணையிட்டார். மேலும், சவுதியில் பெண்கள் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்கு பயிற்சியளிக்கப்படும் என்றும், இதனால் சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிர் மற்றும் பொருளாதார சேதங்கள் நிச்சயம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டு  பெண்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர்.  கார் ஓட்டத் தெரிந்தவர்கள் தங்களது கார்களை இயக்கி ஓட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இந்நிலையில், கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த சரம்மா தாமஸ் என்கிற சோமி ஜிஜி என்ற பெண் சவுதியில் கார் ஓட்ட அனுமதி கோரி ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இவர்  சவுதி அரேபியாவில் ராணுவ மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வருகிறார். ஏற்கெனவே இவர் இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு சவுதி ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.

இதன் காரணமாக  சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: First Indian woman got driving license in Saudi, சவுதியில் ஓட்டுநர் உரிமம் பெற்ற கேரளாவை சேர்ந்த முதல் இந்திய பெண்
-=-