திருவனந்தபுரம்

ந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரு ஐ பி எஸ் அதிகாரி காவல்நிலைய உதவி ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்,

ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்கள் நேரடியாக சூப்பிரண்ட் அல்லது உதவி சூப்பிரண்ட் ஆக பதவியில் அமர்த்தப்படுவார்கள்.  கேரள மாநிலத்தில் இதை மாற்றி அமைக்கப் போவதாக அறிவிப்பு வந்தது.   அதாவது ஐபிஎஸ் தேர்வு பெற்றவர்கள் முதலில் சுமார் 6 மாதங்கள் ஏதேனும் ஒரு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது.

இந்த உத்தரவை பிறப்பித்த கேரள காவல்துறை இயக்குனர் லோக் நாத் பெத்ரா   உள்ளூர் மக்களின் பழக்க வழக்கங்களை புரிந்துக் கொள்ளவும் மலையாள மொழியை கற்கவும் இது எளிதாகும் என குறிப்பிட்டார்.    மேலும் காவல்நிலையத்தின் உள்ள பழக்கங்களை புரிந்துக் கொள்ளவும்  கீழ் அதிகாரிகளின் வேலைப்பளு பற்றிய புரிதலும் இதன் மூலம் மேம்படும் எனவும் தெரிவித்தார்.

தற்போது ஐபிஎஸ் முடித்த நவநீத் சர்மா கேரள மாநிலத்துக்கு பதவி ஏற்க வந்தார்.  டில்லியை சேர்ந்த இளைஞரான நவநீத் சர்மாவுக்கு திருவனந்தபுரம் அருகே உள்ள  பூவார் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பதவி அளிக்கப்பட்டுள்ளது.   நேற்று முன் தினம் பதவி ஏற்ற அவருக்கு மலையாளம் மொழி சிறிதும் புரியவில்லை எனவுக்   அதனால் அவர் பேசவும் புரிந்துக் கொள்ளவும் கஷ்டப்படுகிறார் எனவும் காவல் நிலைய சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.