ந்தூர்

ந்தூரின் முதல் பெண் டாக்டரான பக்தி யாதவ் தனது 91 வயதில் மரணமடைந்தார்

பக்தி யாதவ் உஜ்ஜயினி மாவட்டத்தில் மஹித் பூர் என்னும் ஊரில் பிறந்தவர்.  கரோத் டவுனில் தனது ஆரம்ப படிப்பை முடித்த பின், அஹில்யா பள்ளியில் தன் உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்தார்.  மகாத்மா காந்தி மெடிகல் காலேஜில் 1948ல் தனது டாக்டர் படிப்பை முடித்தார்.  இவரே இந்த கல்லூரியின் முதல் பெண் டாக்டர் ஆவார்.

தனக்கு கிடைத்த அரசுப்பணியை மறுத்து, ஏழைப்பெண்களுக்காக செயல்படும் நந்தாலால் பண்டாரி பிரசவ மருத்துவமனையில் சேர்ந்தார்,   இந்த மருத்துவமனையில் மில் தொழிலாளிகள் குடும்பத்தினர் இலவச சிகிச்சை பெற்று வந்தனர்.  பிறகு இந்தூரின் வத்சாலயா பகுதியில் ஜவுளித் தொழிலாளர்களின் நலனுக்காக தனது சொந்த மருத்துவ மனையை துவக்கினார்.

முற்றிலும் இலவசமாக மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள பெண்களுக்கு தனது மருத்துவமனை மூலம் பிள்ளைப்பேறு பார்த்துள்ளார்.   தனது உடல்நிலை கெட்டுப்போன போதிலும் அதை கவனியாமல் மக்களுக்கு சேவையை தொடர்ந்து செய்து வந்தார்.

இவரது சேவைய பாராட்டி இந்த வருடத்தின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.   இவரை அனைவரும் அன்புடன் டாக்டர் தாதி (டாக்டர் பாட்டி) என அழைத்து வந்தனர்.

டாக்டர் பாட்டி தனது 91 ஆம் வயதில் முதுமை காரணமாக இன்று மரணம் அடைந்தார்.