டெல்லி அரசு பள்ளிக்கு சென்ற மெலானியா டிரம்ப்! பள்ளிக்குழந்தைகள் உற்சாக வரவேற்பு

டெல்லி:

லைநகர் டெல்லியில் உளள அரசு பள்ளிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் சென்றார். அவருக்கு பள்ளிக்குழந்தைகள் இரு நாட்டு கொடிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்கஅதிபர் டிரம்ப் தம்பதிகள், 2வது நாளான இன்று காலை காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராஷ்டிரபதி பவனில் அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தொடங்கியது.

இந்த நிலையில், டிரம்பின் மனைவி மெலினா டிரம்ப், தலைநகர் டெல்லியில் நானக்புரா பகுதியில்  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்தார்.  இந்த பள்ளியானது முழுவதும் ஏசி செய்யப்பட்டு, நீச்சள் குளம் உள்பட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.  இந்த பள்ளிக்கு வருகை தந்த  மெலினாவுக்கு  பள்ளி மாணவ மாணவிகளும், ஆசியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பள்ளியை பார்வையிட்ட மெலினா, அங்குள்ள  கெஜ்ரிவாலின் அரசு அறிமுகப்படுத்தி உள்ள மகிழ்ச்சி பாடத்திட்ட வகுப்பை அவர் அந்த பள்ளியில் பார்வையிட்டார்.. அப்போது ஆசிரியை குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதை சிறிது நேரம் அங்கே அமர்ந்து பார்த்து ரசித்தார்.  அங்கு பள்ளியில் மாணவர்களுடன் உரையாடினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மெலினா பேசியதாவது, நமஸ்தே! இது ஒரு அழகான பள்ளி. ஒரு பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் என்னை வரவேற்றதற்கு நன்றி. இது எனது இந்தியாவுக்கான முதல் விஜயம், இங்குள்ள மக்கள் மிகவும் வரவேற்பு மற்றும் அன்பானவர்கள்.

எனது ‘BE BEST’ முன்முயற்சியின் மூலம் நல்வாழ்வின் ஒத்த கருத்துக்களை ஊக்குவிக்க உங்களைப் போன்ற குழந்தைகளுடன் நான் பணியாற்றுகிறேன். ‘BE பெஸ்ட்’ இன் 3 தூண்களில் போதைப்பொருள் அபாயங்கள், ஆன்லைன் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவை அடங்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று கூறினார்.

.மெலினா டிரம்ப் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.