சபாக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

 

காதலிக்க மறுத்த காரணத்துக்காக டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மி அகர்வால் மீது ஆசிட் வீசப்பட்டது.

பல தடைகளை கடந்து வந்த லக்ஷ்மி அகர்வால் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவர்களின் சிகிச்சைக்கும் உதவி செய்து வருகிறார்

இந்நிலையில் லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை மையப்படுத்தி சபாக் என்ற திரைப்படம் உருவாகிறது. இதில் லக்ஷ்மிஅகர்வால் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேக்னா குல்சர் இயக்கம் இப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்நிலையில் இதன் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

2014-ம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா லக்ஷ்மி அகர்வாலுக்கு வழங்கி கவுரவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.