இன்னும் நான்கே நாட்களில் உஷா உதூப் அக்‌ஷராவின் பாட்டியாக நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தைத் தயாரிப்பதாக சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் லவுட் நிறுவனம் அறிவித்தனர்.

இந்த படத்தில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால் பிரபல பாப் இசை பாடகி உஷா உதூப் அக்‌ஷராவின் பாட்டியாக நடிக்கிறார்.

உஷா உதூப் தமிழில் 1975 ஆண்டிலேயே பணியாற்றி இருக்கிறார். கமல்ஹாசன் நடித்த மேல் நாட்டு மருமகள் படத்தில் லைஃப் ஈஸ் பியூட்டி ஃபுல் என்ற பாடல் பாடி இருக்கிறார்.

பின்னர் சில வருடங்களுக்கும் முன் கமல்ஹாசன் திரிஷா நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்திலும் நடித்திருக்கிறார் உஷா

இந்நிலையில் இன்னும் நான்கு நாட்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது . மேலும் இப்படத்தை குறித்து இயக்குனர் ராஜா ராம மூர்த்தி ஓரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .

You may have missed