தெலுங்கு திரைப்படம் அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் “வர்மா”  ஃபர்ஸ்ட் லுக்   போஸ்டர் வெளியீடு

பிரபல தெலுங்குத் திரைப்படம் தமிழில் வர்மா என்னும் பெயரில் படமாக்கப்படுகிறது.   இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகம் ஆகிறர்.   இந்த படத்தை புகழ்பெற்ற இயக்குனர் பாலா இயக்குகிறார்.    இந்தப் படத்தை ஈ4 எண்டெர்டெயின்மெண்ட் என்னும் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது.  இந்தப் படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.   ஒளிப்பதிவாளராக சுகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பழைய தெலுங்குப் படம் தேவதாஸ் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட படம்.   ஒரு தெலுங்கு இளைஞன் துளு மொழி பேசும் பெண்ணிடம் காதல் கொள்வதை கதையாக சொன்ன படம் அது.    தெலுங்கில் ரூ. 5 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ.50 கோடி வசூலை ஈட்டியது.

தற்போது வர்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.    மற்றும் அந்த போஸ்டர் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.