‘மகாமுனி’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

2011-ம் ஆண்டு வெளியான ‘மெளனகுரு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார் 8 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார்.

‘மகாமுனி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க டட்லி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் எடிட்டராகப் பணிபுரிகிறார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் இன்று ரிலீஸாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் இதன் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கார்ட்டூன் கேலரி