சுந்தர்.சி-யின் தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவீஸ் மூலம் இதுவரை ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது 6வது திரைப்படமான நாங்க ரொம்ப பிஸி படத்தை தயாரித்துள்ளார்.

தீபாவளி சிறப்பாக இந்த படம் சன் டிவி-ல் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக பிரேமும் மற்றும் நடன இயக்குனராக தினேஷும் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி.

படத்தின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கன்னடத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மாயா பஜார் 2016’ ரீமேக் தான் நாங்க ரொம்ப பிஸி.