விஜயின் பிறந்தநாளன்று வெளியிடப்படுமா ‘தளபதி 63’ படத்தின் பஸ்ட் லுக்….!

விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியின் மூன்றாவது படமாக உருவாகும் படம் ‘தளபதி 63’.

வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாததால் ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாடலாசிரியர் விவேக், ‘தளபதி 63’ படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்படும் தேதியை சூசகமாக அறிவித்துள்ளார். இன்றில் இருந்து இன்னும் 30 நாட்களில் தளபதியின் 63 வது படத்தின் பஸ்ட் லுக் வெளியாகும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதனை வைத்து விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தளபதி 63’ படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: atlee, First Look, Thalapathy 63, vijay
-=-