தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!

னுஷ் நடிக்கும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ ஹாலிவுட் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் பல படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக 3 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு பயணமானார்.

கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்  இதன் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது.

பிரபல ப்ரெஞ்ச் நாவலான ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்போது இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.