இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம்.

தமிழில் மாபெரும் ஹிட் அடித்த நிலையில், தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தப் படத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்தப் படம் பச்சன் பாண்டே என்ற டைட்டிலுடன் இந்தியில் உருவாகியுள்ளது. இதில் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.

ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கும் இந்தப் படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.