ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘கசட தபற’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சிம்புதேவன். இயக்கக்த்தில் உருவாகி இருக்கும் படம் ‘கசடதபற’. சிவா, ஜெய், வைபவ், பிரேம்ஜி என வெங்கட்பிரபு டீம் இந்தப் படத்தில் நடித்துள்ளது.

புதுமையாக ஒரே கதையில் 6 பகுதிகள் கொண்டதாக உருவாக்கி இயக்கியுள்ளார் சிம்புதேவன். ‘கசட தபற’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரே படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, ஷான் ரோல்டன் மற்றும் சாம் சி.எஸ் என 6 இசையமைப்பாளர்கள், பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஆர்.டி.ராஜசேகர் என 6 ஒளிப்பதிவாளர்கள், ராஜா முஹமது, ஆண்டனி, காசி விஸ்வநாதன், விவேக் ஹர்சன், ரூபன் மற்றும் ப்ரவீன் கே.எல் என 6 எடிட்டர்கள் பணிபுரிந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி