இந்த கொரோனா ஊரடங்கில் பல திரைப்படங்களின் அறிவிப்புகள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், பாடல்கள் ஆகியவை இணையத்தில் வெளியாகி வருகிறது.ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில், ஆர்மோ மற்றும் கிரண் நூபிடல் ஒளிப்பதிவில், ஷான் லோகேஷ் எடிட்டிங்கில், பிரசன் இசையில், அஜயன் பாலா வசனத்தில் நடிகர் ’வெற்றி’ முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படமான ’மெமரீஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை சிஜுதாமீன் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

பிரவீன் ஏற்கனவே 8 தோட்டாக்கள், ஜீவி உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.