செஞ்சுரியன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இன்று செஞ்சுரியன் மைதானத்தில் முதல் போட்டி தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பெளலிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் துவக்கம் சரியாக அமையவில்லை. ஆனால், ரஸ்ஸி டுசேன் 134 பந்துகளில் 123 ரன்களை அடித்து அணியை வலுப்படுத்தினார். டேவிட் மில்லர் 56 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். ஆண்டிலே 29 ரன்களை சேர்த்தார்.

அதேசமயம், யாருமே அதிரடியாக ஆடாத காரணத்தால், 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களையே எடுத்தது தென்னாப்பிரிக்க அணி.

தற்போது எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி, 12 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியன் பாபர் ஆஸம் களமிறங்கியுள்ளார். பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் வச்சு செய்தது. எனவே, தற்போது தனது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா, பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.