சிட்னி: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

அந்த அணியின் துவக்க ஜோடிகள் சிறந்த துவக்கத்தைக் கொடுத்தனர். டேவிட் வார்னர் 69 ரன்களும், கேப்டன் ஆரோன் பின்ச் 114 ரன்களும் அடிக்க, ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்களை விளாசினார்.

கிளென் மேக்ஸ்வெல் தன் பங்கிற்கு, 19 பந்துகளில் 45 ரன்களை அடித்தார். கூடுதல் ரன்களாக 21 ரன்களை இந்தியா விட்டுக் கொடுத்தது. முடிவில், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா.

இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டகளும், பும்ரா, சைனி, சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

சவாலான இலக்கை நோக்கிய ஆடிய இந்திய அணியில், முக்கிய வீரர்களான மயங்க் அகர்வால், கேப்டன் விராத் கோலி, ஷ்ரேயாஸ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சோபிக்கவில்லை. ஷிகர் தவான் 86 பந்துகளில் 74 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 90 ரன்களையும் அடித்தனர்.

சைனி அடித்த 29 ரன்கள்தான், மூன்றாவது அதிகபட்ச ரன்கள். கூடுதல் ரன்களாக 20 ரன்கள் கிடைத்தன. முடிவில், 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்களில் வீழ்ந்தது இந்தியா.

இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.