சத்தீஸ்கர் தேர்தல் : முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

த்தீஸ்கர்

த்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இந்த வாக்குகள் அடுத்தமாதம் 11 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

இன்று அறிவிக்கப்பட்ட படி முதல் கட்ட வாக்குப்பதிவு சத்தீஸ்கர் மாநில 18 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த 18 தொகுதிகளில் 10 தொகுதிகளில் மாவோயிஸ்டுகள் அச்சறுத்தல்கள் உள்ளன.

அதனால் இந்த 10 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இன்று காலை 8 மணிக்கு மீதமுள்ள 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.