91 லோக்சபா தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு: மாலை 3 மணி நிலவரம்
நாடு முழுவதும் 91 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா உள்பட 4 மாநில சட்டப் பேரவைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் பல வாக்கச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான நிலையில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
மாலை 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்:
தெலுங்கானா மாநிலம் : 48,95 சதவிகிதம்
அசாம் : 59.5 சதவிகிதம்
நாகலாந்து : 68 சதவிகிதம்
மேகாலயா: 55 சதவிகிதம்
மணிப்பூர்: 68. 90 சதவிகிதம்
பீகார் – 41.73
லட்சத்தீவு: 50. 86சதவிகிதம்
உத்தரபிரதேசம் : 50.86 சதவிகிதம்
உத்தரகாண்ட்:46,59 சதவிகிதம்