ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாலை 3 மணி நிலவரப்படி 57.05% வாக்குப்பதிவு

சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளில் முதல்கட்ட உள்ளாட்சி  தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.  மாலை 3 மணி நிலவரப்படி 57.05 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று  156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும்  காலை 11 மணி நிலவரப்படி, 24.08 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.  மதியம் 1 மணி நிலவரப்படி 42.47% வாக்குகள் பதிவான நிலையில், மாலை 3 மணி அளவில் 57.05 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.