ண்டன்

ங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினரின் குழந்தையின் முதல் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கெல் ஆகியோருக்கு சென்ற வருடம் திருமணம் நடந்தது. அவர்களுக்கு டியூக் ஆஃப் சச்சஸ் மற்றும் டியுசெஸ் ஆஃப் சச்சஸ் என பட்டம் உள்ளது. இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது திங்கட்கிழமை காலை ஒரு மகன் பிறந்தார்.

இங்கிலாந்து அரசியும் ஹாரியின் பாட்டியுமான எலிசபத் அரசிக்கு குழண்டஹை காட்ட ஹாரியும் மேகனும் குழந்தையை எடுத்து வந்துள்ளனர். அப்போது முதல் முறையாக இந்த குழந்தையின் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த புகைப்படத்துக்கு உலக மக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்துக்கு 12 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மூவரையும் வாழ்த்தி 21000 பேர் பின்னூட்டம் இட்டுள்ளனர். நமது வாசகர்களுக்காக அந்த படங்களை அளிப்பதில் பத்திரிகை.காம் பெருமை அடைகிறது.