டில்லி,

ந்திய பிரதமர் மோடி முதன்முறையாக பாலஸ்தீனம் செல்கிறார். இதன் காரணமாக பாலஸ்தீனம் செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் சென்று, முதல் இந்திய பிரதமர் என்று  வரலாற்றில் இடம்பிடித்த மோடி, அடுத்ததாக பாலஸ்தீனம் சென்றும் மீண்டும் வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இஸ்ரேல் தலைநகரா ஜெருசலேம் ஆக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.  இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்கும்  தீர்மானத்துக்ஏ எதிர்ப்பு தெரிவித்து  இந்தியா வாக்களித்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 10ந்தேதி பாலஸ்தீனம் செல்கிறார்.  பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.