சென்னை

மிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புக்கள் யோகா உள்ளிட்ட அருங்கலைகளுடன் தொடங்கியது.

தமிழகத்தில் சுமார் 460 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றின் முதல் அரையாண்டுக்கான பாட திட்டம் வரும் 14 ஆம் தேதி தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகம் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஆலோசனைப்படி மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் எட்டு நாட்கள் சிறப்புக் கலைகள் பயிற்சியை அளித்து வருகிறது. அதையொட்டி இந்த வருடம் முதல் அரையாண்டு வகுப்புக்கள் நேற்று தொடங்கியது.

மாணவர்களை புதிய சூழலுக்குத் தயார் செய்ய இந்த சிறப்புக் கலைகள் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கபட்டுள்ளதக அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்  குழு தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் ஆசிரியர் மாணவர் உறவு மேம்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் காலை முதல் மாலை வரை மாணவர்களுக்குப் பல வித கலைகள் கற்பிக்கப்படுகின்றன.

இதில் யோகா, நுண்கலைகள், ஆங்கில பேச்சுப் பயிற்சி, பாடங்களின் அடிப்படைப் பயிற்சி எனப் பலவகை பயிற்சிகள் உள்ளன. அதன்படி நேற்று யோகாவுடன் பயிற்சி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புக்களில்  மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த பயிற்சி வகுப்புக்கள் முடிந்த பிறகு வழக்கமான பாட வகுப்புக்கள் வரும் 14 ஆம் தேதி முதல் நவம்பர் 11 வரை நடைபெற உள்ளன.