சென்னை:

2020ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும், புத்தாண்டு தொடங்கியதும், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். இந்த முதல் கூட்டமான ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெறும் இந்த நிலையில், 2020ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 6ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் 15வது சட்டப்பேரவை கடந்த 2016ம் ஆண்டு அமைக்ப்பட்டது. அதைத்தொடர்ந்து 7 முறை கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 8-வது கூட்டத் தொடர் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையைப் பொறுத்த வரை ஒரு கூட்டத் தொடர் முடி வடைந்து 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, ஜன.20-ம் தேதிக்குள் அடுத்த கூட்டம் நடத்தபட வேண்டும். ஜனவரி 12,13 தேதிகள்சனி, ஞாயிறு அரசு விடுமுறை, ஜன.14-ம் தேதியில் இருந்து பொங்கல் விடுமுறை தொடங்கும்என்பதால் அப்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற சாத்தியமில்லை.

எனவே, ஜனவரி முதல் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019-ம் ஆண்டின்முதல் கூட்டம் கடந்த ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி ஜன.8-ம் தேதி வரைநடந்தது. அதையடுத்து பிப்ரவரிமாதம் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் வந்ததால், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத் துடன் பேரவை கூட்டத் தொடர் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின், துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் 17 நாட்கள் பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது. அத்துடன், 7-வது கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.