வைரலாகும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ வெள்ளாட்டு கண்ணழகி
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “மெஹந்தி சர்க்கஸ்” படத்தின் முதல் பாடலாக, “வெள்ளாட்டு கண்ணழகி” பாடல் இன்று வெளியானது. வெளியான வேகத்தில் ரசிகர்களை ஈர்த்துள்ள இந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பாலுமகேந்திராவிடன் உதவி இயக்குநராக இருந்த சரவண ராஜேந்திரன் திரைக்கதை எழுதி இயக்கும் முதல் திரைப்படம், “மெஹந்தி சர்க்கஸ்”. இப்படத்தின் கதை – திரைக்கதையை “குக்கூ”, “ஜோக்கர்” பட இயக்குநர் ராஜூமுருகன் எழுதியுள்ளார்.
“மெஹந்தி சர்க்கஸ்” என்கிற படத்தின் பெயரும், போஸ்டர்களும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
“வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணகட்டி பல்லழகி..” என்ற இந்த பாடலை யுகபாரதி எழுத, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
வெளியான வேகத்தில், ரசிகர்களை ஈர்த்துள்ள இந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பாடல்…