புதுடெல்லி:

மனிதர்கள் கழிவுநீரை அகற்றும் முறைக்கு டெல்லி அரசு முதல்முறையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மனித உயிரிழப்பு அதிகரித்துவந்தது.
பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு மனிதர்கள் செய்த கழிவுநீர் அகற்றும் பணியைல 50 சிறப்பு இயந்திரங்கள் செய்யப் போகின்றன.

இதனை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி அம்பேத்கார் ஸ்டேடியத்தில் தொடங்கிவைத்தார்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளில் கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 80 தொழிலாளர்கள் டெல்லியில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த பணிக்கு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 50 இயந்திரங்கள் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தரப்படும். இந்தப் பணியை செய்வோர் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

அவர்கள் இயந்திரங்கள் வாங்கவும் அரசு ரூ. 40 லட்சம் வரை கடன் பெற்றுத் தரும். நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த இயந்திரத்தை வைத்து தினமும் குறைந்தது 500 மீட்டர் தொலைவுக்கு கழிவுநீரை அகற்ற முடியும் என்றார்.