Homecoming Season 2-ன் முதல் டீஸரை Amazon Prime தற்போது வெளியிட்டுள்ளது.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உளவியல் த்ரில்லர் தொடரில் தற்போது ஜானெல்லே மோனே கதாநாயகனாக நடிக்கிறார். இந்த புதிய சீசன் மே 22 முதல் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது (30 விநாடி) டீஸரில், ஜானெல்லே மோனே ஒரு ஏரியின் நடுவில் ஒரு படகில் எழுந்து உதவிக்காக கத்துகிறார்.

Amazon Prime இந்த டீசருக்கு தலைப்பிடுகையில்., “ஜானெல்லே மோனே Homecoming-ல் நடிக்கிறார். மே 22 அன்று ஒரு புதிய மர்மம் வருகிறது.” என குறிப்பிட்டுள்ளது.