Random image

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய கிரிக்கெட் அணி சென்னை வருகை

சென்னை:
ங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியினர் சென்னை வந்தடைந்தனர்.

இங்கிலாந்து- இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் விளையாட இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். இந்திய அணியின் கேப்டன் கோலி இன்னிரவு தனி விமானம் மூலம் சென்னை வர உள்ளார்.

இரு அணி வீரர்களுக்கும் சென்னை மந்தவெளியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கி இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து வீரர்கள் ஆறு நாட்களும், இந்திய வீரர்கள் மூன்று நாட்களும் தனிமை ப்டுத்தபடுவார்கள் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.