விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் – 519 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நியூசிலாந்து!

ஆக்லாந்து: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 519 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது நியூசிலாந்து அணி.

நியூலாந்தில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது விண்டீஸ் அணி. இந்நிலையில், முதல் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.

இப்போட்டியில், டாஸ் வென்ற விண்டீஸ் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கியது நியூசிலாந்து அணி.

அந்த அணியின் துவக்க வீரர் டாம் லாதம் 86 ரன்களை அடித்தார். அதேசமயம், கேப்டன் கேன் வில்லியம்சனோ 251 ரன்களைக் குவித்தார். இதில், 2 சிக்ஸர்கள் & 34 பவுண்டரிகள் அடக்கம்.

ராஸ் டெய்லர் 38 ரன்களும், கைல் ஜெமிஸன் 51 ரன்களும் அடிக்க(நாட் அவுட்), 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இரண்டாவது நாளில் 519 ரன்களுக்கு தனது இன்னிங்ஸை முடித்துக்கொள்வதாக அறிவித்தது நியூசிலாந்து அணி. கூடுதலாக மட்டும் 47 ரன்கள் கிடைத்தன.

அதன்பிறகு களமிறங்கிய விண்டீஸ் அணி, விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்திருக்க, 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பிராத்வெய்ட்டும், ஜான் கேம்ப்பெல்லும் களத்தில் உள்ளனர்.