தமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை

ன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில்  குறைந்துள்ளது.

இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டார்.

அதன் பிறகு  கொரோனா தொற்று அதிக அளவில் கேரளாவில் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் அதிகப்படியான தொற்று உள்ள மாநிலமாகக் கேரளா இருந்தது.

அது முழுவதுமாக குறைந்து தற்போது மீண்டும் கேரளாவில் தொற்று அதிகரித்து வருகிறது.

அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து இந்தியாவில் இரண்டாம் இடத்தை அடைந்தது.

தற்போது பாதிப்பு குறைந்து தினசரி 5000 பேருக்குக் குறையாமல் புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

இன்று கேரள மாநிலத்தில் 5376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

ஆனால் தமிழகத்தில் இன்று 5325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கேரளாவை விட இன்று குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

You may have missed