உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் எடுக்கப்படும் ஒரு முழுநீள படம் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ ’புதுமையே உன் பேர் தான் தமிழ் சினிமாவோ…’ என்பதைப் போல தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் புதியவர்கள், இளையவர்கள் அதிகம் இப்போது வருகிறார்கள். அவர்களில் இயக்குனர் எம்.எஸ்.செல்வாவும் ஒருவர்.

இவர் இன்று 21.10.2016 அன்று ஒரு சாதனை நிகழ்த்தவிருக்கிறார். அதாவது பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரியவிருக்கிறார். இன்று தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி சப்unnamed-10ஜெக்டான ஹாரர் காமெடி தான் படத்தின் களம். படத்தின் பெயர் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’.

ஒரு வீட்டுக்கு புதுமண தம்பதிகள் குடி வருகிறார்கள். கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை. எனவே பேய் நம்பிக்கையை வரவழைத்து விரட்ட சில நண்பர்களை அமர்த்துகிறான். திகிலுடன் முதல் பாதி சென்றுகொண்டிருக்கும்போதே இன்னொரு புதுமண தம்பதி தங்க இடம் கேட்டு வருகிறார்கள். அவர்களை மேலே தங்க வைக்கிறான் கணவன். இந்த நேரத்தில் அங்கிருக்கும் பேய்கள் தான் செட் பண்ணிய போலி பேய்கள் இல்லை… உண்மையான பேய்கள் என்று தெரிய வருகிறது. அதன் பின் அந்த உண்மை பேய்களிடம் மாட்டிக்கொண்டு இரு தம்பதிகளும் என்னென்ன பாடு படுகிறார்கள் என்பதை இரண்டாம் பாதி முழுக்க வயிறு குலுங்க வைக்கும் காமெடியாக சொல்லவிருக்கிறது ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ படம்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு முடிவடையவிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாத கடின உழைப்பினாலும், திட்டமிடலாலும் இந்த சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது இயக்குனர் எம்.எஸ்.செல்வா தலைமையிலான படக்குழு. இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் பல இயக்குனர்கள் சேர்ந்து எடுத்த சுயம்வரம் படம் தமிழில் குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமாக சாதனைப்பட்டியலில் நீடிக்கிறது. அதனை முறியடிப்பதோடு லிம்கா சாதனைப்பட்டியலிலும் இடம்பெறும் உத்வேகத்துடன் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்தம் ஆறு கேமரா செட்டப், ஏற்கெனவே பயிற்சி தரப்பட்ட கலைஞர்கள் என முழுமையான திட்டமிடல் படத்தை நிச்சயம் சாதனைப்பட்டியலில் சேர்க்கும் என நம்பலாம். குறைந்த நேரத்தில் எடுக்கப்படும் படத்தில் மூன்று பாடல்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்
டாக்டர். பி.சரவணன்
அனுகிருஷ்ணன்
சிங்கம்புலி
குமரேசன்
இயக்குனர் எம்.எஸ்.செல்வா
கிரேன் மனோகர்
நெல்லை சிவா
சுப்புராஜ்
போண்டா மணி
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு – ஜெயக்குமார் தங்கவேலு
இசை – ராஜா
பாடல்கள் – இயக்குனர் எம்.எஸ்.செல்வா
ஒப்பனை – பழனி
நடனம் – மது
தயாரிப்பு – எம்.எஸ்.செல்வா, ஜி. அழகர்
இயக்கம் – எம்.எஸ்.செல்வா
மக்கள் தொடர்பு – வீகே.சுந்தர்