பீஜிங்

டந்த 27 வருடங்களில் இல்லாத அளவுக்கு தற்போது சீன பொருளாதார வளர்ச்சி 6.2% ஆக குறைந்துள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெறும் வர்த்தகப் போரினால் சீன வர்த்தகம் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.   அந்த வர்த்தக போர் மேலும் தொடர்ந்து வருகிறது.  சீன பொருட்களின் முக்கிய சந்தையான அமெரிக்கா இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியதால் சீனத் தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பால் சீன வர்த்தகம் இந்த வருடம் 29100 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு பாதிப்பு அடைந்துள்ளது.   இது மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.   அமெரிக்க வர்த்தக நிறுத்தத்தினால் சீனாவில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.   தற்போது முடிந்த காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.2% ஆகி உள்ளது.

கடந்த 27 ஆண்டுகளில் இது மிக மிக குறைவான வளர்ச்சி ஆகும்.  இதை ஈடுகட்ட சீனா பல்வேறு வகையில் முயன்று வருகிறது.   ஆயினும் எவ்வித பயனும் ஏற்படாமல் உள்ளது.  இந்த பொருளாதார வளர்ச்சி குறைவு காரணமாக சீனாவின் உற்பத்தி குறைந்துள்ளது.  கடந்த வருடம் 6.3% ஆக இருந்த உற்பத்தி தற்போது 5.2% ஆக குறைந்துள்ளது.

இந்த வர்த்தக குறைவால் முதலீட்டு சந்தையிலும் சரிவு ஏற்பட தொடங்கி உள்ளது.  எனவே இந்த முதலீடுகளை அதிகரிக்க பல நிறுவனங்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.   சீனப் பொருட்கள் விலை மலிவானவை என்பதால் மற்ற உலக நாடுகளில் வர்த்தகத்தை அதிகரிக்க சீன ஏற்றுமதியாளர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.