Random image

அரியானா மாநில சீக்கியர் அமெரிக்க அதிபரின் பாதுகாவலர் ஆனார்

வாஷிங்டன்

ரியானா மாநிலத்தை சேர்ந்த சீக்கியர் அன்ஷ்தீப் சிங் பாட்டியா அமெரிக்க அதிபருக்கு பாதுகாவலராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1984 ஆம் வருடம் அரியானாவை சேர்ந்த அம்ரீக் சிங் பாட்டியா கான்பூரில் வசித்து வந்தார்.   அவர் அங்குள்ள பஞ்சான் சிந்து வங்கியின் மேலாளராக இருந்தார்.  அவருடைய மகன் தேவேந்திர சிங் ஒரு மருந்தகம் நடத்தி வந்தார்.   அம்ரீக் சிங் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டிருந்த அந்த நேரத்தில் சிக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது.

 

 

ஒரு கும்பலால் அம்ரீத் சிங் மருமகன் கொல்லப்பட்டார்.   தேவேந்திர சிங் கலவரத்தில் சிக்கி மூன்று குண்டுகள் பாய்ந்து உயிர் தப்பினார்.   இந்த கலவரங்களால் கலங்கிப் போன அம்ரீத் சிங் லூதியானாவுக்கு பணி மாற்றம் பெற்று குடும்பத்துடன் அங்கு சென்றார்.    அங்கு தேவேந்திர சிங் திருமணம் செய்துக் கொண்டார்.

கடந்த 2000 ஆம் வருடம் தேவேந்திர சிங் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடி ஏறினார்.  அப்போது அவருடைய மகன் அன்ஷ்தீப் சிங் பாட்டியாவுக்கு 10 வயது.   அங்கு படித்து கல்வி பெற்ற அன்ஷ்தீப் அமெரிக்க அதிபரின் பாதுகாவல் படையில் சேர விரும்பினார்.   ஆனால் அவர் உடை மற்றும் தாடியின் காரணமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அன்ஷ்தீப் சிங்க்குக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியது.   அதன் பிறகு அவர் தனது பயிற்சியை முடித்து தற்போது அமெரிக்க அதிபரின் பாதுகாவலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   ஒரு சீக்கியர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.