க்னோ

ந்திய ரெயில்வே வரலாற்றில் முதல் முறையாகத் தாமதத்துக்காக பயணிகளுக்கு இழப்பீடு அளிக்கப்பட உள்ளது.

 

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தனியார் ரெயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தாமதமாகும் பட்சத்தில் பயணியருக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது   இந்த ரெயில் லக்னோ மற்றும் டில்லிக்கு இடையில் செல்லும் முழுவதும் ஏசி வசதி கொண்ட ரெயில் ஆகும்   இந்த ரெயில் நேற்று தாமதமாக இயக்கப்பட்டுள்ளது.

நேற்று லக்னோ அருகில் கிரிஷேக் எக்ஸ்பிரஸ் என்னும் ரெயிலில் சில பெட்டிகள் தடம் புரண்டன.  இதனால் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு வழிகலுலிம் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.   நேற்று லக்னோவில் இருந்து கிளம்பிய ரெயிலில் 451 பேரும் டில்லியில் இருந்து புறப்பட்ட ரெயிலில் 500 பேரும் இருந்துள்ளனர்.

இந்த பயணிகளுக்குச் சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கும் போது தாமதத்துக்கு வருந்துகிறோம் என எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.  அத்துடன் இந்த ரெயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக ரூ.250 வழங்கப்பட உள்ளது.

பயணிகள் தங்கள் பயணச் சீட்டை  முன்பதிவு செய்தபோது அளித்துள்ள மொபைல் எண்ணுக்கு ஒரு இணைய தள இணைப்பு அனுப்பப்பட உள்ளது.  பயணிகள் அதன் மூலம்  இழப்பீட்டைக் கோரலாம் என இந்தியரெயில்வே அறிவித்துள்ளது.