வரலாறு காணாத சரிவு : டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.70.08 ஆகியது.
மும்பை
இந்திய ரூபாய் மதிப்பு இன்று காலை வரலாறு காணாத அளவில் ஒரு டாலருக்கு ரூ.70.08 ஆக சரிந்துள்ளது.
ஒரு நாட்டின் பண மதிப்பு அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டு கணக்கிடப்படுகிறது. டாலரின் மதிப்பு அதிகரிக்கைக்கயில் அந்த நாட்டடுப் பணத்தின் மதிப்பு குறைவதாகப் பொருளகிறது. அந்நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றது. பொருளாதார நிபுணர்கள் பலரும் ரூபாயின் மதிப்பு சரிந்து ரூ.70 ஐ தாண்டும் என கூறி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.68.93 ஆக இருந்தது. இன்றைய பங்குச் சந்தையின் தொடக்கத்தில் அது ரூ.69.75 ஆக சரிந்தது. சுமார் 10.34 மணிக்கு அது ரூ. 70 ஐ தாண்டியது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.08 ஆக சரிந்துள்ளது. வரலாற்றில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ.70 ஐ தாண்டி சரிந்தது இதுவே முதல் முறை ஆகும்.