முதன் முறையாக சவுதியில் வாட் வரி விதிப்பு

வுதி அரேபியா

முதன் முறையாக சவுதி அரேபியா உட்பட ஆறு அரபு நாடுகளில் வாட் மற்றும் சின் டேக்ஸ் விதிக்கப்பட்டுள்ளது.

வாட் எனப்படும் வால்யூ ஆடட் டேக்ஸ் என்பது. விற்கப்படும் பொருட்களின் மேல் விதிக்கப்படும் வரி,  இது மறைமுக வரி என சொல்லப்படுகிறது.  அது அதிகபட்ச விலையின் மேல் விதிக்கபடுகிறது.

சின் டேக்ஸ் என்பது சமுதாயத்துக்கு அபாயம் தரக்கூடும் எனக் கருதப் படும் பொருட்கள் மேல் விதிக்கப்படுவது,  உதாரணமாக புகையிலை, மது, ஊக்க பானம், சாஃப்ட் ட்ரின்க்ஸ், சூதாட்டம், துரித உணவுகள் போன்றவை.

சரித்திரத்தில் முதல் முறையாக ஆறு அரபு நாடுகளில் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.   சவுதி அரெபியா, பெஹ்ரைன், குவைத், ஓமன், ஐக்கிய அரபு தேசம் ஆகிய நாடுகளில் ஜனவரி 1, 2018 முதல் இந்த வரி விதிப்பு அமுலுக்கு வருகிறது.  கடத்தலை தடுக்கவே வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  வாட் 5% விதிக்கப் படுகிறது.

சவுதி அரேபியாவில் கல்வி, சமூக சேவைக்கான உபகரணங்கள், மருந்து மற்றும் சுகாதாரம், 95 வகை உணவு வகைகள் ஆகியவற்றுக்கு வாட் இல் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் வருமான வரி, சொத்து வரி போன்றவை கிடையாது.  எனவே இந்த வாட் மற்றும் இதர வரிகள் நாட்டுக்கு வருமானம் கொடுக்கும்.  தற்போது கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் உண்டான வருமானக் குறைபாட்டை இந்த வரிகள் ஈடு செய்யும் என சவுதியின் அரசு கருதுகிறது.

You may have missed