இந்தியாவில் முதல்முறை: ஒடிசாவில் பெட்ரோல் விலையைவிட டீசல் விலை அதிகம்

டில்லி:

நாட்டிலேயே முதன்முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை உயர்ந்துள்ளது. இது ஆச்சரியத்தையும், பரபரப்பையும்ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்றைய  பெட்ரோல் விலையை விட டீசல் விலை 12 பைசா அதிகமாக கூடியுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல் விலையை விட டீசல் விலை குறைவாக இருப்பதாலேயே பெரும்பாலோர் டீசல் வாகனங்களையே வாங்கி உபயோகித்து வருகின்றனர். அதுபோல கனரக வாகனங்களும் டீசலில் இயங்கும் வகையிலேயே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் டீசல் விலை தினசரி கச்ச விலைக்கு தகுந்தவாறு மாற்ற மத்திய அரசு ஆயில் நிறுகூனங்களுக்கு அனுமதி அளித்ததுமுதல், தினம்தோறும்  நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது கடந்த 5 நாட்களாக சற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட கடீசல் விலையானது முதன் முறையாக அதிகரித்துள்ளது.‘

ஒடிசா மாநிலத்தில்  பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.57-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், டீசல் ஒரு லிட்டர் அதைவிட 12 காசுகள் அதிகமாக, அதாவது ரூ.80.69-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மாநிலத்தின் வாட் வரி விதிப்பு காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.64 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.22 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக்ததில், நேற்றையை விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 32 பைசா குறைந்து,  ரூ.84.64 ஆக உள்ளது. அதுபோல டீசல் விலையை விட 29 பைசாக்கள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.22 ஆக உள்ளது.  இரண்டும் இடையே சுமார் 5 ரூபாய் வித்தியாசம் உள்ளது.

ஆனால், ஒடிசாவில் டீசல் விலை பெட்ரோலை விட கூடி உள்ளது. இந்தியாவில் இதுதான் முதன்முறை என கூறப்படுகிறது.

You may have missed