இந்தியாவில் முதன்முறை: நின்றபடியும் செல்லும் வகையிலான சக்கர நாற்காலி! சென்னை ஐஐடி சாதனை

சென்னை:

ட்கார்ந்து மற்றும் நின்றபடியும் செல்லும் வகையிலான சக்கர நாற்காலியை சென்னை  ஐஐடி கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த நாற்சாலி, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட  இந்தியாவின் முதலாவது ‘நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலி’ என்று ஐஐடி தெரிவித்து உள்ளது.

இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகமான  சென்னை ஐஐடி, மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான பீனிக்ஸ் உடன் இணைந்து,  உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலி’யை வடிவமைத்து உள்ளது.

இந்த சக்கர நாற்காலி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த சக்கர நாற்காலிக்கு ‘அரைஸ்’ (Arise) என்று பெயரிடப்பட்டுள்ளது. நவீன முறையில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த நாற்காலியை,  சென்னை ஐஐடி-யின் இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் சுஜாதா ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினர்  உதவியுடன்,  ஐஐடியில் உள்ள மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் கருவிகள் தயாரிப்புக்கான டிடிகே மையத்தால் வடிவமைத்து தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு  இங்கிலாந்தைச் சேர்ந்த வெல்கம் அறக்கட்டளை ஒத்துழைப்பு நல்கியதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நாற்காலி வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், இதுபோன்ற நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலியை உலகில் வேறு எங்கும் பார்க்கவில்லை என்றும்,  இதை உருவாக்கிய சென்னை ஐஐடி மற்றும் அதன் சார்பு நிறுவனங்களை பாராட்டுவதற்காக கூறியவர், இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும்  குறிப்பிட்டார்.

தற்போது வெளியிடப்பட்டு உள்ள இந்த நவீன சக்கர நாற்காலி, அமர்ந்த நிலையில் இருந்தும், நின்ற நிலையில் பயணம் செய்ய முடியும். சக்கர நாற்காலியை உபயோகப்படுத்தும்,  மாற்றுத் திறனாளிகள், சுதந்திரமாகவும், பிறரது உதவியின்றி செல்வதற்கு இந்த சக்கர நாற்காலி மிகுந்த உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

https://www.youtube.com/watch?v=myPEp13zr1A

You may have missed