இந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்

சேலம்
தமிழகத்தில் உள்ள சேலம் மாநகரில் ஐம்பொன்னால் ஆன பொத்தான்கள் பொருத்தப்பட்ட சட்டை இந்தியாவில் முதல் முரையாக அறிமுகம் ஆகி உள்ளது.


இது குறித்து நெட்டிசன் ஈசன் எழில்விழியன் பதிந்துள்ள முகநூல் பதிவு இதோ:

ஐம்பொன் பட்டன்கள் பொருத்தப்பட்ட ஆபரண வெள்ளை சர்ட் ,இந்தியாவில் முதன்முறையாக சேலத்தில் அறிமுகம்..!
சேலம் சித்தேஸ்வரா பகுதி,குலசேகர ஆழ்வார் தெருவை சேர்ந்தவர், பரம்பரை பொற்கொல்லர் ,எங்கள் அன்பு நண்பர் தினகரன் அவர்கள், செம்பு, துத்தநாகம்,வெள்ளீயம்,வெள்ளி,தங்கம் என ஐம்பொன்களால் செய்யப்பட்டு 22காரட் தங்கமூலாம் பூசப்பட்ட ஐம்பொன் பட்டன்கள் பொருத்தப்பட்ட ரெடிமேட் வெள்ளை சர்ட்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்…!


உயர் ரக வெள்ளைதுணி கொண்டு 40,42,44 அளவுகளில் சிறந்த டெய்லர்களை கொண்டு நேர்த்தியாக வெள்ளை சர்ட்கள் தைக்கப்பட்டு, ஐம்பொன் பட்டன்கள் உடன் பார்க்கவே அந்தஸ்தாக உள்ளன…!
கோவில்களில் ஐம்பொன்னால் ஆன சிலைகளை வழிபாடு செய்யும் போது, ஐம்பொன் பட்டன்கள் பொருத்தப்பட்ட சட்டை அணிவது தெய்வீக ஆற்றல், நேர்மறை அதிர்வுகளை நாம் கிரகிக்க உதவும் என்கிறார் தினகரன்…!
சமீபத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியில் பண்டைய தமிழர்கள் தங்கத்தினால் செய்யப்பட்ட பட்டன்கள் கொண்ட சட்டையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது…!
ஐம்பொன்பட்டன்கள் நம் பாரம்பரியங்களில் ஒன்று எனவும் ,விழாகளுக்கு செல்லும் போது ஐம்பொன் ஆபரண சட்டைகள் நம் மதிப்பையும் மரியாதையையும் கூட்டும் என்றும் தினகரன் சொல்கிறார்…!
இந்த ஐம்பொன் பட்டன்கள் தேவைபடாத போது எடுத்து வைத்து விட்டு ,சாதாரண பிளாஸ்டிக் பட்டன்களை பொருத்திக் கொள்ளும் வகையில் சர்ட்டில் பட்டன் காஜா வடிவமைக்கப்பட்டுள்ளது…!
துவைக்கும் போதும்,அயர்ன் பண்ணும் போது பட்டன்களை தனியே கழட்டி வைத்து விடலாம்…!

இந்த ஐம்பொன் பட்டன்கள் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் உழைக்கும்..! அப்பா,மகன்,பேரன் என தலைமுறையாக உபயோகிக்கலாம் என்பது தனிச்சிறப்பு..!
மேலும் நமக்கு பிடித்த கடவுள் படங்கள், லோகோ ,டிசைன்கள் இவற்றை தேவைக்கேற்ப தினகரன் ஐம்பொன் பட்டன்களில் பொறித்து தருகிறார்..!
ஐம்பொன் ஆபரண தூய வெள்ளை சர்ட் தேவைப்படுவோர் 9965827256 என்ற எண்ணிற்கு தினகரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்…!
தினகரன் அவர்கள் , பிரசித்தி பெற்ற ஈரோடு டெக்ஸ் வேலியில் (கடை எண் 1054 ) ஷோரூம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!
இந்த தீபாவளிக்கு , கீழடியில் கண்ட வைகை நதி நாகரீக தங்கபட்டன்களை போற்றும் வகையில்,ஐம்பொன் பட்டன்கள் பொருத்தப்பட்ட ஆபரண வெள்ளசர்ட்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்..!
நண்பர் தினகரன் அவர்களின் படைப்பில் உருவான ஐம்பொன் ஆபரண வெள்ளை சர்ட்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற எமது மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்..!
#ஈசன்எழில்விழியன்..!

கார்ட்டூன் கேலரி