நாட்டில் முதன் முதலாக கள்ள நோட்டு வழக்கில் ஆயுள் தண்டனை விதிப்பு

டில்லி

ள்ள நோட்டை புழக்கத்தில் விட்டதாக எழுந்த வழக்கில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளில் அச்சடிக்கப்பட்ட இந்திய ரூபாய் கள்ள நோட்டுக்கள் சட்ட விரோதமாக இங்கு புழக்கத்தில் விடப்படுவதாக புகார்கள் எழுந்தன. பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணம் இத்தகைய கள்ள நோட்டு ஒழிப்பு என கூறப்பட்டது. இந்த கள்ள நோட்டுக்களை கொண்டு வந்து புழக்கத்தில் விடுவோரை தேசிய புலனாய்வுத் துறை தீவிரமாக தேடி வந்தது.

தேசிய புலனாய்வுத் துறை புழக்கத்தில் உள்ள நோட்டுக்களில் ஒவ்வொரு பத்து லட்சம் நோட்டுக்களில் 250 நோட்டுக்கள் கள்ள நோட்டுக்களாக உள்ளதாக தெரிவித்தது. அப்போது சுமார் ரூ. 400 கோடி அளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்ததாகவும் துறை தெரிவித்தது. அதே நேரத்தில் பல கள்ள நோட்டுக்கள் அடையாளம் காண முடியாதபடி உள்ளதால் அவைகளை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்பட்டது.

கடந்த 2016 ஆம் வருடம் தேசிய புலனாய்வுத்துறை கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதாக அஃப்ரோஸ் அன்சாரி, சன்னி குமார் என்னும் கபிர் கான், இஸ்ராஃபுல் ஆலம், அலாங்கிர் ஷேக் ஆகியோரை கைது செய்தது. இவர்களை ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட போது இவர்களிடம் சுமர் 5.94 கோடி அளவிலான கள்ள ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப் பட்டன. இவைகளில் பாதிக்கு மேல் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஆகும்.

கைது செய்யபப்ட்ட நால்வரும் இந்திய பொருளாதாரத்தை சிர்குலைக்கும் தீவிர வாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டது. இவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவர்கள் நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கள்ள நோட்டு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முத்ல் முறையாகும்