தொழிற்சாலை உற்பத்தி வரலாற்றில் இல்லாத அளவு 4.3% ஆகக் குறைவு

டில்லி

டந்த மாதம் தொழிற்சாலை உற்பத்தி வரலாற்றில் முதல் முறையாக 4.3% ஆகக் குறைந்துள்ளதாக அரசுத் தகவல் தெரிவிக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  இதற்கு முக்கிய காரணம் உற்பத்திக் குறைவாகும்.  இந்த உற்பத்திக் குறைவு வாகன உற்பத்தி, சுரங்கத் தொழில், மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட தொழில்களிலும் பரவி வருகிறது   மக்களிடையே போதிய நிதி வசதி இல்லாததால் வர்த்தகச் சரிவு ஏற்பட்டு அதன் எதிரொலியாக உற்பத்திக் குறைவு உண்டாகி உள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 4.3% வரை உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.    இது வரலாற்றில் முதல் முறையாகக் குறைவான உற்பத்தி ஆகும்.   இது ஒவ்வொரு மாதமும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.  கடந்த மாதம் இந்த உற்பத்தி குறைவானது 1.1% ஆக இருந்துள்ளது.

இது குறித்து பொருளாதார நிபுணர் தேவேந்திர குமார் பந்த், “இது வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவு உ ற்பத்திக் குறைவு ஆகும்.  இதில் மூலதனப் பொருட்கள் உற்பத்தி 20.7% ஆகக் குறைந்துள்ளது.  சுரங்கத் தொழிலில் 8.5% குறைவு ஏற்பட்டுள்ளது.  உற்பத்தித் துறையில் 3.9% குறைவு உண்டாகி இருக்கிறது.   மின் உற்பத்தித் துறையும் 2.6% உற்பத்திக் குறைவை சந்தித்துள்ளது.

நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 9.1% குறைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 9.9% ஆக மேலும் குறைந்துள்ளது.   சென்ற வருடம் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 0.4% அளவுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், செப்டம்பரில் 4.1% வளர்ச்சியைக் கண்டது.  இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு உற்பத்திக் குறைவு அதிக அளவில் இருந்தது.  தற்போதைய நிலை அதை விடவே அதிகமாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.