அமெரிக்கா : உலகில் முதல் முறையாக ஒரே நாளில் 2108 கோரோனா மரணம்

வாஷிங்டன்

லகில் முதல் முறையாகக் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2108 பேர் மரணம்  அடைந்துள்ளனர்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.

நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2108 ஆகி உள்ளது.

உலகில் எந்த நாட்டிலும் இவ்வளவு பேர் 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிர் இழந்தது இல்லை.

அத்துடன் கடந்த சில தினங்களாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உலக அளவில் மிக அதிகமாக உள்ளது.