முதன்முதலாக ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலையில்  நாளை தொடங்குகிறது

சென்னை:

ண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த வர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தமிழகத்தில் முதன்முறையாக  நாளை தொடங்குகிறது.

இந்த ஆண்டு முதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என அரசு ஏற்கனவே  அறிவித்துள்ள நிலையில், நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் முதன்முதலாக  இந்த ஆண்டு  பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் மற்றும்  கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்துகிறது. இந்த ஆண்டு  பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு 6ந்தேதி (நாளை) தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை  சிறப்புப் பிரிவினருக்கு ஒற்றை சாளர முறையிலான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தகுதி பெற்ற மாணவர்கள், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்திற்கு நேரில் வர வேண்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், நேரில் வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்றும் மாணவர்க ளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அண்ணா பல்கலைக்கழகம்  தெரிவித்துள்ளது.

நாளை (6ந்தேதி) நடைபெற உள்ள சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

7ந்தேதி (நாளை மறுதினம்) நடைபெற உள்ள கலந்தாய்வில்  முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜூலை 8-ந்தேதி கலந்தாய்வு விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

காலை, 9 மணி,, 10:30 மணி, நண்பகல் 12 மணி  மற்றும் மதியம் 2 மணி என 4 கட்டங்களாக நாளை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதற்கான தகவல் மாணவர்களுக்கு இ – மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ்., வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஜுலை 10ஆம் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.