சிறுநீராக பீர் (Beer) வெளியேற்றும் உலகின் முதல் பெண்….. மருத்துவ விந்தை…..

வாஷிங்டன்:

மெரிக்காவில் ஒரு பெண் வெளியேற்றும் சிறுநீர் பீர் என்பது தெரிய வந்துள்ளது, அதாங்க உடல் குளிர்ச்சிக்கு பெரும்பாலோர் அவ்வப்பபோது ருசிக்கும் டாஸ்மாக் … பீர்… என்ன வியப்பாக இருக்கிறதா……

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் உள்ள ஒரு பெண்ணுக்கு, அவரது உடலில் இருந்து வெளியாகும் சிறுநீர் வித்தியாசமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆய்வில்,அந்த பெண்ணின் சிறுநீர் பையில் சில வேதியியல் மாற்றம் காரணமாக,  சிறுநீர் பீராக உருமாறி வெளியேறுகிறது…

நமது மக்களிடையே… பொதுவாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், பீர் அருந்துவதால், கிட்னி ஸ்டோன் வருவதற்கான சாத்தியக்கூறு குறைவு என்ற குருட்டு  நம்பிக்கையில் தாராளமாக பீர் அருந்தி வருகிறார்கள்… அதுபோலது இளம்வயது  இளைஞர்கள் சற்று பூசி மெழுகினால் போல தோற்றம் தேவை என அவ்வப்போது பீரை ருசி பார்த்தும் வருகின்றனர்….

இதுபோன்ற நிலையில், அமெரிக்க பெண்ணுக்கு சிறுநீரே பீர் ஆக வெளியேறி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 61 வயதாகும் அந்த பெண்ணுக்கு சர்க்கரை நோய் (diabetes)  மற்றும் கல்லீரல் சிரோசிஸ் (liver cirrhosis) நோய்கள் உள்ளதாகவும், விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள மருத்துவர்கள், அதற்கான ஆய்வுகள் நடத்தியபோதுதான், அந்த பெண் வெளியேற்றும் சிறுநீர் பீர் – ஆக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அந்த பெண் அதிக அளவில் மது குடிப்பதால், இதுபோன்ற நிகழ்வு ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய மருத்துவர்கள், குடிப்பழக்கமே இல்லை என்பதும், மேலும் எந்தவொரு கெட்டப்பழகமும் இல்லை என்பதும் தெரிய வந்தது. அந்த பெண்ணை முழு உடல் சோதனை செய்த மருத்து வர்கள், அந்த பெண்ணின் சிறுநீரகப்பையில் உள்ள ஈஸ்ட்-டும், சர்க்கரையும் சேர்ந்து, ஆல்கஹாலை மாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது… இதனால்தான் அந்த பெண் வெளியேற்றும் சிறுநீர், பீராக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

விசித்திரமான இந்த நிகழ்வு மருத்துவ உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது.  ஆல்கஹாலை சிறுநீராக  கழிக்கும் பிரபலமற்ற பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அவரது நிலைக்கு “யூரினரி ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம்” என்று பெயரிட்டுள்ளனர்.

அந்த பெண்ணின் சிறுநீர் பையில்  அதிக அளவு ஆல்கஹால் உற்பத்தி செய்யப்படுவதற்கு காரணமான ஈஸ்டை அகற்ற மருத்துவர்கள் மேற்கொண்ட எந்தவொரு முயற்சியும் பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஆய்வுகள், அந்த பெண்ணின் சிறுநீர் பையில் உருவாகும் ஈஸ்ட் கேன்டிடா கிளாபராட்டா (Candida glabrata,) என்ற ஈஸ்ட்தான் என்பதை கண்டறிந்துள்ளனர்.

மேலும், ஆல்கஹால் சிறுநீர் கழிப்பது என்பது நீங்கள் நினைப்பது போல் பெரிய விஷயமல்ல. இந்த குறிப்பிட்ட விஷயத்தில், நோயாளியின் ஆரோக்கியத்தில் எந்தவொரு எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன.

இந்த வினோத பிரச்சினை மற்றும் ஆய்வுகள் குறித்து, அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் என்ற மருத்துவ இதழில் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே  கடந்த 2017ம் ஆண்டு, டென்மார்க்கை சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனம், பிஸ்னர் என்ற புது ரக பீரை தயாரித்தது. . இந்த பீரை தயாரிப்பதற்காக ஒரு இசை திருவிழாவில் இருந்து ஐம்பதாயிரம் லிட்டர் சிறுநீர் சேகரிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தியது… அதற்கு விளக்கம் அளித்த நோர்ப்ரோ, இந்த பீரில் எந்தவித மனிதக் கழிவுகளும் இல்லை என்று உறுதியளித்ததுடன்,  பீரில் பார்லி பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக பார்லி சாகுபடியில், மாட்டுச்சாணம் அல்லது உரத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உரங்களே பயன்படுத்தப்படும். அதற்கு பதிலாக மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்பட்டது என்று விளக்கம் அளித்தது.

பொதுவாக மதுபானம் தயாரிக்க ஈஸ்ட் எனப்படும் புளிக்க வைக்கப்பயன்படும்  பொருள் உபயோகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Alcohol Brews, First woman, Urinates Beer, ஆல்கஹால் சிறுநீர், சிறுநீர், பீர், பீர் சிறுநீர்
-=-