மக்களவையின் முதல் பெண் செயலாளர் நியமனம்

டில்லி

க்களவையின் பொதுச் செயலாளராக ஒரு பெண் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை பொதுச் செயலாளர் பதவி அமச்சரவை செயலாளருக்கு இணையான பதவி ஆகும்.  அந்தப் பதவிக்கு சினேகலதா ஸ்ரீவத்சா என்னும் பெண் ஐ ஏ எஸ் அதிகாரியை  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நியமித்துள்ளார்.

பெண் ஒருவர் இந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்படுவது இதுவே முதன் முறை ஆகும்      கடந்த 1957ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி பிறந்த சினேகலதா ஸ்ரீவத்சா மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஐ ஏ எஸ் ஆக 1982ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.  இவர் அரசின் பல துறைகளிலும் பணி ஆற்றி உள்ளார்..