அமெரிக்க முதல் பெண் துணை அதிபர் & தெற்காசிய, ஆப்பிரிக்க மரபைக் கொண்டவர் – கமலா ஹாரிஸ் சாதனை..!

வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் மற்றும் தெற்காசிய & ஆப்பிரிக்க மரபைக் கொண்ட முதல் துணை அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ்.

தற்போது, ஜனநாயகக் கட்சியின் சார்பாக அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் கமலா ஹாரிஸ். இவரின் தயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் தந்தை ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர்.

தனது சிறுவயதில், தாயின் பூர்வீகமான தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார் கமலா ஹாரிஸ். இவருக்கு தமிழ் மொழி தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அமெரிக்காவின் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், அந்நாட்டில் அப்பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள முதல் பெண்மணியாவார்.

இவர் அந்நாட்டின் கலிபோர்னியா மாகாண செனட்டராக பதவி வகித்தவர். முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமை மட்டுமின்றி, முற்றிலும் வெள்ளை இனத்தைச் சாராத, தெற்காசிய(தமிழ்நாடு) & ஆப்பிரிக்க பூர்வீகம் கொண்டவர் என்பது மற்றொரு பெரிய சிறப்பம்சம்.