பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.23 முதல் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: பொறியியல் வகுப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 23ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பமாகும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா தளர்வுகளின் அடிப்படையில் வரும் 16ம் தேதி முதல் கல்வி நிலையங்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் வரும் 23ம் தேதி முதல், முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதற்கான அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 23ம் தேதி முதல் பிப்ரவரி 24ம் தேதி வரை முதல் செமஸ்டருக்கான வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பிஇ படிப்புகளுக்கான கலந்தாய்வு அண்மையில் தான் முடிந்தது. மொத்தம் 71 ஆயிரத்து 195 இடங்களே நிரம்பி உள்ளன. 20 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.