டில்லி:

கி புயலின் போது காணாமல் போன மீனவர்களை இறந்ததாக அறிவிக்க வேண்டும் என மீனவர் பேரவை அரசை வலியுறுத்தி உள்ளது.

நேற்று டெல்லியில், தேசிய மீனவர் பேரவையின் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்தப் பேரவையி ன் கூட்டத்தில்  உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பீகார், அரியானா மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளங்கோ கூட்டத்துக்குப் பிறகு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இளங்கோ தனது பேட்டியின் போது, “நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி, இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓகி புயலின் போது தமிழகத்தில் மாயமான மீனவர்கள் அனைவரையும் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.   அத்துடன்  அவர்களுக்குரிய முழு நிவாரணத் தொகையையும் உடனடியாக குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்.

ஓகி புயலின் போது மாயமான மீனவர்கள் குறித்து அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் மரண விசாரணை நடத்த வேண்டும்.   பிரதமர் நிதியில் இருந்து  பல்வேறு விபத்துகளில் இறப்பவர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குகிறது.    ஆனால் மீனவர்களுக்கு மட்டும் அந்த சலுகையை வழங்க  மறுத்து வருகிறது.

மாநில அரசு ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அல்லது குடும்ப உறுப்பினரில் ஒருவருக்கு அரசு வேலை தரவேண்டும்”  என்றார்.