ராமேஷ்வரம்,

லங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என ராமேஷ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை  இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லபட்ட பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை என ராமேஷ்வரம் பகுதி மீனவர்களும், இறந்த பிரிட்ஜோவின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

மீனவர் பிரச்சினைக்கு  நிரந்தர தீர்வு காணப்படும் வரை உடலை பெறமாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தங்கச்சிமடம் கிராமத்தில் மீனவர்கள் ஆலோசனை நடத்தி வருகி்ன்றனர்.

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 464 படகில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் இரவு 10 மணி அளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஒரு விசைப்படகு மீது சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவருக்கு கழுத்தில் குண்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மற்றொரு மீனவருக்கு காயம் ஏற்பட்டது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆகவே. இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காணும்வரை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து,  தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர்களும் கலந்து கொண்டு அவசர ஆலோசனை கூட்டம் நடக்கி றது. இந்த கூட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு கலைந்து செல்லமாட்டோம் என்றும், இறந்தவரின் உடலை வாங்க மாட்டோம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு என ஏராளமான 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்ட னர். முடிவு எடுக்கப்பிட்ட பிறகு, அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, இது சம்மந்தமாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

மீனவர்களின் முக்கியமான  கோரிக்கை என்னவென்றால், இந்த பிரச்சனைக்கு இதனுடன் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்றும், இந்த உயிரிழப்பே கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.

மீனவரின் உடலை மாவட்ட ஆட்சியர் தலைவர், மாவட்ட எஸ்பி, புலனாய்வுத்துறை அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் உடலை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.