பிராமண எதிர்ப்பால் மீன் பிடிக்க தடை : உயர்நீதிமன்றத்தை நாடும் மீனவர்கள்

கமதாபாத்

பிராமணர்கள் எதிர்ப்பால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டதாகவும் அதை நீக்கக் கோரியும் மீனவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

குஜராத் அரசு கடந்த 2017 ஆம் வருடம் ஜூன் மாதம் பிரதாப்சாகர் ஏரியில் ஐந்து வருடங்கள் மீன் பிடிக்க ஒப்பந்தம் கோரி விளம்பரம் செய்திருந்தது.   அதை ஒட்டி மீனவர் சங்கம் அளித்த ஒப்பந்தம் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜூலை 2017 முதல் 2022  ஜூன் வரை குஜாராத் சபார்கந்தா ஆட்சியரால்  ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஹீராலால் பூனம்லால் ஜோசி என்பவர் ஒரு பொது நல வழக்கை தொடர்ந்தார்.    அதன்படி பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பை ஒட்டி இந்த பிரதாப்சாகர் ஏரியில் மீன் பிடிக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.   அத்துடன் அந்த ஏரியில் மீன் பிடிக்க அனுமதிப்பதின் மூலம் இந்துக்களின் மத உணர்வு புண்படுவதால் அதை அனுமதிக்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மீனவர் சங்கம் சார்பில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது.   அப்போது சங்கத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சுப்ரமணியம் ஐயர் இந்த பொதுமனுவை அளித்த ஜோஷி தனது மனுவை திரும்பப் பெற்றும் இந்த உத்தரவு ரத்து செய்யப்படவில்லை என வழகு விசாரணையில் தெரிவித்தர்.

இதை ஒட்டி குஜராத் உயர்நீதிமன்றம் சபர்காந்தா ஆட்சியர் அலுவலகத்துக்கு உடனடியாக பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.