மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டில்லி:

டக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள்  செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக  வடக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்து உள்ளது.

மேலும்,  அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும். ஒடிசாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறி உள்ளது.

சென்னை வானிலை மையம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவதை இன்று தொடங்குகிறது… நாளை தொடங்குகிறது என்று கூறி வந்த சென்னை வானிலை மையம்,  தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1 முதல் வடகிழக்குபருவ மழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது.

டிட்லி மற்றும் லூபன் புயல்கள் காரணமாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்ற வானிலை மைய இயக்குனர்,  நவம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.